ஒன்றாக மது அருந்தும் தம்பதிகள்: உண்மையான காதலைக் கண்டு உருகும் நெட்டிசன்கள்
காதல் என்பது வயது வித்தியாசம், நிறம், இனம் எதுவும் பார்க்காமல் தோன்றுவதே.
அவ்வாறு இருபதில் தோன்றிய காதல் அறுபது வரை செல்லுவது ஆச்சரியம் தான்.
இவ்வாறு இரு காதலர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் வீடியோ காட்சி தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களையும் ஆக்கிரமித்து விட்டது.
வைரல் வீடியோ
மும்பையில் ஒரு உணவகத்தில் வயதான தம்பதிகள் மங்கலான வெளிச்சத்தில், திறந்த மொட்டை மாடி உணவக மேசையில் நேருக்கு நேர் அமர்ந்துக் கொண்டு டீ குடிப்பது போல எதையோ குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் அருகில் சென்று பார்க்கும் போது தான் தெரிகிறது இருவரும் மதுபானம் குடிக்கிறார்கள் என்று, இவர்கள் இந்த மதுபானத்தை குடித்து விட்டு ஒரு சின்ன சிரிப்பு சிரிக்கிறார்கள். இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவிற்கு “இந்தியாவில் வயதான தம்பதியர் ஒரு கிளாஸ் பீர் சாப்பிடுவதை நீங்கள் பார்ப்பது சாதாரண விஷயமல்ல, நானும் எனது நண்பர்களும் மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் அத்தகைய ஜோடியை சந்தித்தோம்.
நாங்கள் அவர்களைப் பார்த்து வியப்படைந்தோம், மேலும், அவர்களின் வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். என பதிவிட்டிருந்தார்கள்.
இந்த வீடியோவிற்கு பலரும் பல எதிர்மறையான கமெண்டுக்களை பகிர்ந்தும் வருகின்றனர் மேலும், இந்த வீடியோ தற்போது அதிகமான பார்வையாளர்களை கொண்டு வைரலாகி வருகின்றது.