விமர்சனத்தை எதிர்கொள்ளுங்கள் - மீண்டும் பேசுபொருளான விஜய் சேதுபதியின் பேச்சு!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஏற்கனவே பேசிய கருத்துகள் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும்விமர்சனம் வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டும்; விமர்சனத்தை எதிர்கொள்வதுதான் முதிர்ச்சியின் அடையாளம் என்ற கருத்தை தெரிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
விஜய் சேதுபதி சர்ச்சை கருத்து
கமல்ஹாசனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் 10வது சீசனையும் அவரே தொகுத்து வழங்குகிறார். சமீபத்திய நிகழ்ச்சியில் போட்டியாளருக்கு அறிவுரை வழங்கிய விஜய் சேதுபதி, தலைமைத்துவம், வாக்குறுதிகள், பொறுப்பு உள்ளிட்டவை குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து, அவர் தமிழக அரசியலை மறைமுகமாக விமர்சித்ததாக சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் விஜய் சேதுபதிக்கு எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.
மீண்டும் வைரலான பேச்சு
இதையடுத்து, தனது முந்தைய கருத்து குறித்து விளக்கம் அளித்த விஜய் சேதுபதி, அந்தப் பேச்சு பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை மட்டுமே குறிப்பதாகவும், அதனை வேறு விதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த வார நிகழ்ச்சியிலும் விஜய் சேதுபதி பேசிய ஒரு கருத்து மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியாளர்களிடம் பேசும்போது, விமர்சனம் வந்தால் அதை எதிர்கொள்ள வேண்டும்; விமர்சனத்தை எதிர்கொள்வதுதான் முதிர்ச்சியின் அடையாளம் என்ற கருத்தை விஜய் சேதுபதி தெரிவித்தார்.
இந்தப் பேச்சைத் தொடர்ந்து மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது. ஒரு தரப்பினர், இது போட்டியாளர்களுக்கு அவர் வழங்கிய பொதுவான அறிவுரை என்றும், மற்றொரு தரப்பினர், கடந்த வாரம் ஏற்பட்ட சர்ச்சையின் பின்னணியில் இந்தக் கருத்தையும் பார்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
இதனால், விஜய் சேதுபதியின் இந்தப் பேச்சும் தற்போது சமூக வலைதளங்களில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு தரப்பினரிடையே விவாதப் பொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |