புதினாவை தினமும் எடுத்துக்கோங்க... நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீங்க
புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதினா
வாசனையுடைய தாவரமான புதினா நாம் சமையலுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றோம். இதன் பயன்களும் அதிகமாக உள்ள நிலையில், நமக்கு தெரியாத சில நன்மைகளை இங்கு மேலும் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் புதினாவை மவுத் வாஷ், மெந்தோ ஃபிரஸ், சுவீங்கம் ஆகியவற்றிலும் பயன்படுத்தி வருகின்றனர். குளிர்ச்சியைக் கொடுக்கு தாவமான இதில் அதிகமாக மருத்துவ குணங்கள் உள்ளது.
புதினா இலையில் டீ போட்டும் குடிக்கலாம். இவை புத்துணர்ச்சி அளிப்பதுடன், வாய் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
image: istock
மேலும் சில நன்மைகள்
புதினா நாம் எடுத்துக் கொள்வதால் வாய் துர்நாற்றத்தை நீக்கி, புத்துணர்ச்சியை கொடுக்கின்றது.
புதினாவில் உள்ள இயற்கை எண்ணெய்கள், இரைப்பை என்சைம்களை தூண்டி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றது.
சோம்பல் மற்றும் சோர்வு உணர்வுகளை குறைத்து புத்துணர்ச்சியை கொடுக்கின்றது.
உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்துவதில் புதினா முக்கிய பங்கு வகிக்கின்றது. இதன் காரணமாக உஷ்ணத்தினால் ஏற்படம் வெப்பத்தினை குறைக்க முடியும்.
புதினாவில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மைகள் காய்ச்சல், தொண்டை வலி போன்றவற்றை குறைக்க உதவுகின்றது.
புதினாவின் வாசனை மற்றும் அதன் எண்ணெய்யை உடலில் தேய்ப்பதால் தலைவலி குறையும்.
இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி இன்ஃபிளாமேட்டரி தன்மைகள் உள்ளதால், இது அழற்சியைக் குறைக்க உதவுகின்றது.
தோலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தினை அளிப்பதுடன், சுருக்கம், மடி மற்றும் சிரங்கு போன்ற பிரச்சனையை குறைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |