மாமனார், மருமகனுடன் சேர்ந்து நடித்த தமிழ் நடிகைகள் யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
அவர்களில் சிலர் நடிகர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் இன்னும் சில இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள்.
வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த நடிகைகள் ஒரு குடும்பத்திலுள்ளவர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர்கள் இருக்கிறார்கள்.
கதைக்களம் எதுவாக இருந்தாலும், நட்சத்திர நடிகர்கள் நிறைந்ததால், படத்தை வெற்றிபெறச் செய்த பல கூட்டணிகள் உள்ளன.
அந்த வகையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகைகள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
த்ரிஷா
மணிரட்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் பிரபலமான த்ரிஷா, நடிகர் ரஜினிகாந்துடன் “பேட்ட“ படத்திலும், தனுஷுடன் “கொடி” படத்திலும் எதிர்மறை வேடத்தில் நடித்திருப்பார்கள்.
ஜோதிகா
சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோருடன் ஜோதிகா நடித்திருக்கிறார். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சார்ந்த நடிகர்கள். சிவகுமாருடன் 'பூவெல்லாம் உன் வாசம்’, ‘உயிரிலே கலந்தது’ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'தம்பி'திரைப்படத்தில் கார்த்தி உடன் நடித்துள்ளார். அத்துடன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா, ரஜினிகாந்த் மற்றும் அவரது மருமகன் தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். 'சந்திரமுகி', 'தர்பார்' மற்றும் 'அண்ணாத்த' ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதே வேளை தனுஷுடன் 'யாரடி நீ மோகினி' படத்தில் பணியாற்றியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |