Tamilzha Tamizha: இறந்தவரை வரவழைத்த பெண்! அரங்கத்தில் நடந்தது என்ன?
தமிழா தமிழா நிகழ்ச்சியில் இறந்தவர்களுடன் பேச முடியும் என சொல்பவர்கள் மற்றும் அதை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.
இந்த வாரத்தில் இறந்தவர்களுடன் பேச முடியும் என சொல்பவர்கள் மற்றும் அதை நம்பாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் எழுந்துள்ளது.
இதில் தான் இறந்த ஆத்மாவை அரங்கத்திற்குள் கொண்டுவருவதாக கூறி பெண் ஒருவர் செய்துள்ள காரியம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது நபர் ஒருவரை தேங்காய் மீது அமர வைத்து ஒரு இறந்த போனவரை வரவழைத்து பேசியுள்ளார். அப்பொழுது நீங்கள் ப்ளாக் மேஜிக்கினால் இறந்திருக்கீங்க... அப்படியெனில் சீக்கிரமா போய் இறக்கிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.
அப்பொழுது தேங்காய் மீது அமர்ந்த நபரும் சட்டென்று கீழே இறங்குகின்றார். இதனை அவதானித்த எதிர்தரப்பினர் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |