“குடிப்பது, புகைபிடிப்பது தவறில்லை..” போட்டு வாங்கிய தொகுப்பாளர் - வசமாக சிக்கிய வனிதா!
பெண்கள் புகைபிடிப்பது ஒரு வகை முன்னேற்றம் தான் சர்ச்சை பேச்சால் வனிதா விஜயகுமார் மீண்டும் இணையவாசிகளிடம் சிக்கியுள்ளார்.
கோலிவுட்டில் அதிகமான பட வாய்ப்புகளை கையில் வைத்து கொண்டு நடித்து வரும் நடிகைகளில் வனிதா விஜயகுமாரும் ஒருவர்.
இதனை தொடர்ந்து வனிதா தன்னுடைய இரண்டு குழந்தைகளை மிகச் சிறப்பாக கண்கானித்து வருகின்றார்.
சினிமா என ஒரு பக்கம் இருக்காமல் யூடியூப் சேனலில் வீடியோ, ரியாலிட்டி ஷோ என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் வாய்ப்பை பயன்படுத்தி பிரபலமடைந்து வருகின்றார்.
குடிப்பழக்கம் குறித்து வனிதா அதிரடி முடிவு
இந்த நிலையில் ஜெயிலர் பட இசைவெளியீட்டு விழாவில் நடிகர் ரஜனிகாந்தை அனைவரும் இனி குடிக்காதீர்கள் என கேட்டு கொண்டார்.
இது குறித்து வனிதாவிடம் கேட்ட போது, “ குடிப்பது, புகை பிடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம். நடிகர்கள் போல் நடிகைகள் குடித்தால் அது சமூக சீர்குலைவு என பேசுவார்கள். ஆனால் அவை உண்மையல்ல.
காலம் மாறுக் கொண்டே செல்கிறது. தற்போது இருக்கும் நவீன வளர்ச்சிக்கு இது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. சினிமாவிற்காக இதனை செய்தால் அது ஒன்றும் தவறில்லை...” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள் “ என்ன காலம் மாறினாலும் தமிழர்களின் கலாச்சாரம் மாறக்கூடாது..” என பதிலடிக் கொடுத்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |