வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர் பால் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்
நடிகை வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பால் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வனிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றதுடன், யூடியூப் சேனல் ஒன்றினையும் நடத்தி வருகின்றார்.
ஏற்கனவே இரண்டு பேரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் இருவரையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்பு கொரோளா காலக்கட்டத்தில் இவர்களுக்கு உதவியாக இருந்த கிராபிக்ஸ் டிசைனர் பீட்டர் பால் என்பவரை காதலித்து, கிறிஸ்தவராக மாறி அந்த முறைப்படியே திருமணம் செய்து கொண்டார்.
பின்பு சில மாதங்களே இவர்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், அவரின் அதிக குடிபழக்கம் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியதோடு, இருவரும் பிரியவும் செய்துள்ளனர்.
உயிரிழந்த பீட்டர் பால்
இவர்களின் திருமணம் பெரும் பேச்சுப்பொருளாக இருந்த நிலையில் தற்போது பீட்டர் பால் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் இறப்பிற்கு அதிக குடிபழக்கம் தான் காரணம் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது இவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாக கூறப்படுகின்றது.
பீட்டர் பாலின் இறப்பிற்கு வனிதா தனது இரங்கலையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீட்டர் பால் தான் சம்பாதித்த பணம், சொத்து இவற்றினை மூத்த மனைவி மற்றும் அவரது மகனுக்காக சேர்த்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வனிதாவை பிரிந்த பின்பு பீட்டர் பால் முதல் மனைவியின் வீட்டிற்கு கூட செல்லாமல் தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.