எங்களுக்குள் இருப்பது காதல் தான்! மனதில் இருந்ததை ஓபனாக பேசிய தமன்னா..என்ன சொன்னார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் தமன்னா அவரின் காதல் தொடர்பில் ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார்.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் தான் தமன்னா.
இவர் நடிப்பில பல பிரபலங்கள் வந்தாலும் இவர் நடிப்பில் வெளியான “ பாகுபலி” படத்தில் பிரபாஸ்வுடன் நெருக்கமாக இருக்கும் காட்சி தான் பெரிதாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
இந்த நிலையில் தமன்னாவை பொது இடங்களில் பார்த்த சிலர் இவர் விஜய் வர்மாவுடன் இருப்பதை கண்டுள்ளார்கள்.
எனக்கானவர் அவர் தான்..
பின்னர் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என பல சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு சமீபக்காலமாக ஒரு பதிலும் கூறாத தமன்னா தற்போது ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் “லஸ்ட் ஸ்டோரிஸ் 2” என்ற சீரியஸ் வெளியிட்டு விழாவில் இவர்களின் காதல் குறித்து கேட்ட போது, “ ஆம் நாங்கள் காதலிக்கிறோம். அவரிடம் இருக்கும் போது நான் இயல்பாக இருக்கின்றேன்.
எனக்கு என ஒரு தனி இடம் இருக்கின்றது. அவருக்காக என்னை நான் மாற்றிக் கொள்ளவில்லை. விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்” என புன்னகையுடன் ஓபன் டாக் கொடுத்துள்ளார்.
இந்த விடயம் அங்கிருந்த பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் ரசிகர்கள் தமன்னாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.