அஜித்தின் ரீல் தங்கை கர்ப்பம்! புகைப்படத்தை வெளியிட்ட நடிகை- குவியும் வாழ்த்துக்கள்
நடிகைகளைப் பொறுத்தவரையில் அவர்களது வாழ்வில் என்ன நடந்தாலும் அதை அப்படியே சமூக வலைத்தளங்களில் அனைவருடனும் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அந்த வகையில் ஆழ்வார் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் நடிகை ஸ்வேதா பண்டேகர்.
ஆழ்வார் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த இவர், தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, நான் தான் பாலா, பூலோகம், பூவா தலையா உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் படங்களில் வாய்ப்பு கிடைக்காத ஸ்வேதா, சின்னத்திரை பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.
சன் டிவியில் ஒளிபரப்பான மகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர், தொடர்ந்தும் நிலா, ரோஜா, மகராசி உள்ளிட்ட சன் டிவி சீரியல்களிலும் லட்சுமி வந்தாச்சு என்ற ஜீ தமிழ் சீரியலிலும் நடித்துள்ளார்.
இவர் நடித்த சீரியல்களிலேயே இவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத்தந்தது சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல்தான்.
இதில் இவரது துணிச்சலான நடிப்பும் சவாலான கதாபாத்திரமும் அனைவரது மனதையும் கவர்ந்தது. அதன் பின்னர் அன்பே வா சீரியலில் தோன்றிய ஸ்வேதா, வேறு எந்த சீரியலிலும் தென்படவில்லை.
இவரது திரை வாழ்க்கை இப்படியிருக்க, இவர் சன் மியூசிக் தொகுப்பாளரான மால் மருகா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பமாக உள்ளார்.
எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்வேதா, தனது கர்ப்பகால புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.