குபேரனுக்கு மட்டும் வட்டி கட்டும் உலகின் பணக்கார கடவுள்: ஏன் தெரியுமா?
உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்தவர் குபேரன் தான்.
இவரை வழிபட்டால் வீட்டில் செல்வங்கள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
இது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆகாச ராஜன் என்ற மகனின் மகளான பத்மாவதித் தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக வேடம் பூண்டு பூலோகம் வந்தார் ஏழுமலையான்.
ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் பூவுலகில் வாழ்ந்து வந்த மகாலட்சுமியை காதலித்த ஸ்ரீநிவாசன், திருமணம் செய்துக் கொள்ள ஆகாசராஜனிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தனது மகளை மணம் முடித்துத் தர வேடன் வேடத்தில் இருந்த ஸ்ரீநிவாசனிடம் கோடிக்கணக்கில் வரனிடம் தட்சணை வேண்டினார் மன்னன்.
மகாலட்சுமியான பத்மாவதியை மணம் முடிப்பதற்காக, வேடன் ஸ்ரீநிவாசன், குபேரனிடம் இருந்து ஆயிரம் கோடி பொற்காசுகளை கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது.
கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே அந்த கடன் பத்திரத்தின் நிபந்தனை.
அதனால் தான் பெருமாள் இதுவரை வட்டி மட்டும் கட்டி வருகிறார். அசல் கடனை அடைக்க முடியாமல் கடனாளியாக இருக்கிறார்.
அதனால் தான், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் குபேர காணிக்கை எனும் பெயரில் குபேரனுக்கு காணிக்கை தரப்படுவது குறிப்பிடத்தக்கது.