கையில் தாலியுடன் கெஞ்சும் சோனியா அகர்வால்: அதிரடியாக சின்னத்திரையில் எண்ட்ரி
நடிகை சோனியா அகர்வால் தற்போது சின்னத்திரை சீரியலில் களமிங்கியுள்ள ப்ரொமோ காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சோனியா அகர்வால். பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவருக்கு பெரியளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், பின்பு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது வெள்ளித்திரை பிரபலங்கள் சின்னத்திரையில் சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருவது வழக்கமாகி வருகிறது. நடிகை நந்திதா ஸ்வேதா பிரபல ரிவியில் அபியும் நானும் என்ற சீரியலில் நடித்தார்.
இவரைத் தொடர்ந்து தற்போது சோனியா அகர்வால் பாண்டவர் இல்லம், நினைத்தாலே இனிக்கும் சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றார். இதன் ப்ரொமோ காட்சி இன்று வெளியாகியுள்ளது.