கட்டியணைத்தப்படி புகைப்படம் வெளியிட்ட சினேகா- பிரசன்னா! விவாகரத்திற்கு இது என்ன பதிலடியா?
திருமணம் முடிந்து 2 பிள்ளைகள் இருக்கும் நிலையில் இன்னும் நெருக்கமாக இருக்கும் சினேகா - பிரசன்னா இருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் புன்னகையரசி என புனை பெயர் கொண்டு செல்லமாக அழைக்கபடுபவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழ் சினிமாவிற்குள் “என்னவளே” என்ற படத்தில் நடித்து தான் அறிமுகமானார்.
நடிகை சினேகா பல திரைப்படங்கள் நடித்தும் வரவேற்பு கிடைக்காத நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து “வசீகரா” திரைப்படத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
இவரின் சிரிப்பு இன்று வரை சினிமாவில் ரசிகர் கூட்டமே இருக்கிறார்கள்.
விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில் சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் அழகிய பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் இவர்கள் விவாகரத்து என வதந்திகள் கிளம்பிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் புது வருடத்தை முன்னிட்டு இருவரும் தமிழ் கலாச்சார ஆடையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ இவ்வளவு சந்தோசமாக இருக்கும் சினேகாவா விவாகரத்து கேட்டார்” என குழப்பமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.