கணவரை விவாகரத்து செய்கிறாரா நடிகை சினேகா? அம்பலமாகிய உண்மை
நடிகை சினேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்வதாக வெளியான தகவலுக்கு ரொமான்ஸ் புகைப்படத்தினை வெளியிட்டு தம்பதிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
நடிகை சினேகா
தமிழ் திரையுலகில் கடந்த 2000ம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா என்பதும், இவர் ‘என்னவளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்பு பல படங்களில் நடித்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் கூடிய புகைப்படங்களை அவ்வப்போது அவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
கணவரை விவாகரத்து செய்கின்றாரா?
இந்நிலையில் சினேகா தனது கணவரை விரிந்து வாழ்ந்து வருவதாகவும், குடும்ப சண்டை காரணமாக விலகி இருக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தற்போது குறித்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரொமான்ஸ் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு வதந்திக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.