குளிர்பான மூடிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடை: இவ்வளவு அழகாக இருக்குமா?
இன்றைய உலகில் ஒரு சிலரால் துக்கி எறிந்த பொருட்களை வைத்து அழகான பொருட்களை தயாரிக்க முடிகின்றது. இதுவும் ஒரு சிலரால் மட்டுமே முடிகின்றது. அவ்வாறு துக்கிய எறியப்பட்ட குளிர்பான மூடிகளைக் கொண்டு ஒரு அழகான ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.
குளிர்பான மூடிகளில் உருவாக்கப்பட்ட ஆடை
மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் சுற்றுகளில் ஒன்றான தேசிய ஆடை போட்டியில் போட்டியாளர்கள் தங்கள் நாட்டின் கலாச்சாரத்தை ஆக்கப்பூர்வமான முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயதான அன்னா சுயங்கம் என்ற நடிகை அணிந்து வந்திருக்கிறார்.
அந்தவகையில் இந்தியா சார்பில் திவிதா ராய், இறக்கைகளுடன் கூடிய அற்புதமான தங்க நிற லெஹங்கா அணிந்து அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தார்.
அவரது உடை வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் செல்வத்தின் சின்னமாக விளங்கும் இந்தியாவை தங்கப் பறவையாக சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆடையை அபிஷேக் சர்மா என்பவர் தான் வடிவமைத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியின்போது அவர், குப்பையில் வீசப்பட்ட குளிர்பான மூடிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து அழகாக வலம் வருவார். மேடையில் வித்தியாசமான உடையை அணிந்துவந்ததால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.