சர்ச்சை வீடியோவால் பிரபலமான சீரியல் நடிகை ஸ்ருதி நடிக்க வந்தது எப்படி? முழு விவரம் இதோ
லீக் வீடியோவால் பிரபலமான ஸ்ருதி நாராயணன் எப்படி சீரியலில் நடிக்க வந்தார் என்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஸ்ருதி நாராயணன்
தமிழ் சின்னத்திரையில் வளர்ந்து வரும் நடிகை தான் ஸ்ருதி நாராயணன்.
இவர், தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை” சீரியலில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பல ஆயிரம் ரசிகர்களை கொண்ட இந்த சீரியலில் ஸ்ருதி நடிக்கும் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன், சின்னத்திரையில் மாத்திரம் இருக்காமல் வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு தேடி வருவதாக சொல்லப்படுகிறது.
சர்ச்சையை கிளப்பிய காணொளி
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவருடைய முகம் சாயலில் ஆடை இல்லாமல் இருக்கும் இருக்கும் காணொளியொன்று காட்டுத்தீ போல் வைரலாகி வந்தது.
சமூக வலைத்தளங்களில் வைரலாக இருந்த காணொளியை இணையவாசிகள், Deep Fake, AI Video என கூறி வந்தார்கள்.
காணொளியில் இறுதியில் ஒருவர் “Audition முடிந்து விட்டது..” எனக் கூறுகிறது. இதனை கவனித்த இணையவாசிகள் ”வாய்ப்பாக தான் ஸ்ருதி இப்படி செய்தாரா?” என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வாய்ப்பு கிடைத்தது எப்படி?
ஸ்ருதி நாராயணன் சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் படித்தவர். இவருக்கு பள்ளியில் படிக்கும் போதே நடிப்பில் ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 12ஆம் வகுப்பு படிக்கும் பொழுது முதல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஸ்ருதி, கல்லூரியில் படிக்கும் சமயத்தில் சில யூடியூப் சேனல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதனை பயன்படுத்தி கடந்த 2021ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அதே போன்று ஒரு பிரபல தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார். அதன் பின்னரே சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
வெள்ளத்திரையில் நடித்திருக்கிறாரா?
நடிகை ஸ்ருதி தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்ல சமந்தாவின் “சிட்டடெல்” என்ற வெப் தொடரிலும் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.
நடிகையின் பதிலடி
நடிகையின் அந்தரங்க காணொளிக்கு பதில் கொடுத்துள்ளார்.
அதாவது, “ இது போன்று காணொளியை வைரலாக்குவது எனக்கும் என்னை சார்ந்தவர்களுக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது..” எனக் கூறியுள்ளார்.
மேலும், ஒருவரின் அனுமதியின்றி இது போன்ற வீடியோக்களை பரப்புவதற்கு சட்டத்தில் என்னென்ன தண்டனைகள் இருக்கிறது என்பதையும் தெளிவாக வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி இணையவாசிகள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நடிகையின் பதிலடியை பலர் ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |