வெளிநாட்டில் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஹன்சிகா... உடன் இருக்கும் ஆண் நண்பர் யார்?
நடிகை ஹன்சிகா விவாகரத்துக்கு பின்பு வெளிநாட்டில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஹன்சிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் ஹன்சிகா, சிம்புவைக் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
பின்பு தனது தோழியை விவாகரத்து செய்து பிரிந்த சோஹேல் என்பவரைக் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்தார். இவர்களின் திருமண வீடியோவும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியானது.
பின்பு இருவருக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். மேலும் கணவர் தனக்கு இழைத்த கொடுமைகளையும் ஹன்சிகா கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் ஹன்சிகா
தற்போது பழைய வாழ்க்கையிலிருந்து மீண்டு வெளிவருவதற்கு, அவ்வப்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று வரும் நிலையில், தற்போது ரஷ்யாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வந்துள்ளார். ஹன்சிகா வெளியிட்ட புகைப்படத்தில் ஆண் நண்பர் ஒருவர் துள்ளிக் குதிப்பது போன்று காணப்படுகின்றது.

குறித்த நபர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும் ஹன்சிகா இப்புகைப்படத்துடன் Privet என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.
இதற்கு அர்த்தத்தை தேடிய நெட்டிசன்கள் கடைசியில் அதன் அர்த்தத்தினையும் கண்டுபிடித்தனர். ஆம் ரஷ்ய மொழியில் Privet என்றால் Hi என்று அர்த்தமாம்.
ஹன்சிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா? சிறு வயது முதலே குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவரும் இவர் எப்பொழுதும் நன்றாக இருப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |