பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார்... அதிர்ச்சியில் திரையுலகினர்
இந்திய திரையுலகின் பிரபல பின்னணி பாடகியான எஸ்.ஜானகி தனது 88 வயதில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
பாடகி ஜானகி
இந்திய திரையுலகின் மகத்தான பாடகியாக வலம்வந்தவர் தான் எஸ். ஜானகி. தற்போது இவருக்கு 88 வயதாகியுள்ள நிலையில், வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆவார். 1938ம் ஆண்டு பிறந்த இவர் மூன்று வயதிலிருந்து 10 வயதிற்குள் இசையைக் கற்று, தனது ஒன்பதாவது வயதிலேயே முதல் மேடை நிகழ்ச்சியில் பாடினார்.
பின்பு 1957ம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற படத்தில் பெண் என் ஆசை பாழானது என்ற முதல் பாடலை பாடினார். தொடர்ந்து தெலுங்கு படத்திலும் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
17 மொழிகளில் பாடி அசத்திய ஒரே பாடகி என்ற பெருமை பெற்ற இவர், அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும், அனைத்து பின்னணி பாடர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

விருதை வாங்க மறுத்தது ஏன்?
குறிப்பாக இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூட்டணியில் பாடிய பாடல் இன்றும் ரசிகர்களிடையே முத்திரை பதித்துள்ளது.
தனிப்பாடல்கள், பின்னணி பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய இவர், சில தமிழ், தெலுங்கு மொழி பக்தி பாடல்களை தானே எழுதி இசையமைத்து பாடியுள்ளார்.
கலைமாமணி விருது, சிறந்த பாடகி தேசிய விருது கேரளா மற்றும் ஆந்திரா, தமிழகம் என மாநிலங்களில் பல விருதுகளை பெற்றுள்ளார்.

1992ம் ஆண்டு இலங்கையில் ஞான கான சரஸ்வதி என்ற பட்டம் பெற்றதுடன், 2013ம் ஆண்டு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்த நிலையில், அவை மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி ஏற்க மறுத்துவிட்டார்.
இவ்வாறு தனது குரலினால் ஒரு சகாப்தத்தினையே உருவாக்கிய எஸ்.ஜானகி அம்மா இன்று உடல்நலக் குறைவினால் காலமாகியுள்ளார் என்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த துயர செய்தி கேட்டதும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |