அடித்துக் கொடுமைப்படுத்திய கணவன்: விவாகரத்தைக் கொண்டாடிய சாலினி! வாயடைத்துப் போன நெட்டிசன்கள்!
பொதுவாக நாம் எல்லோரும் எமது வாழ்க்கையில் நடக்கும் இன்பமான நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக புகைப்படங்களை எடுத்துக் கொள்வோம் ஆனால் இங்கு ஒரு நடிகை தனது விவாகரத்தை வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார்.
சீரியல் நடிகை
பிரபல தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து பிரபல்யமான நடிகை தான் ஷாலினி. அதற்குப் பிறகு குஷ்பு ரீ என்டி கொடுத்த சீரியலில் அவருக்கு வில்லியாக நடித்திருந்திருந்தார்.
அதற்குப் பிறகு திருமணம் செய்து செட்டிலான பிறகு நடிக்காமல் இருந்தார். பிறகு ஜீ தமிழ் ஷோ சூப்பர் மாம் ரியாலிட்டி ஷோவில் தனது மகளுடன் பங்கேற்றியிருந்தார்.
மாடலிங் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான ஷாலினி போட்ட போட்டி , சன்குடும்பம், போன்ற ரியாலிட்டி நிகழிச்சிகளில் பங்கேற்றுள்ளார் இந்நிலையில், நடிகை ஷாலினி பற்றிய செய்தி ஒன்று தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலினி ரியாஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகளும் உண்டு. இந்நிலையில் ஷாலினி தனது கணவர் தன்னை பலமுறை துன்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.
இது இவ்வாறு இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனது கணவரை பிரியப்போவதாகவும் அவருக்கும் தனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருப்பதால் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அது தற்போது கிடைத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவாகரத்துக் கிடைத்ததை வித்தியாசமாக போட்டோஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.