மகனுடன் கால்பந்து மைதானத்திற்கு வந்த ஷாலினி! அடையாளம் தெரியாமல் மெலிந்துவிட்ட காட்சி
நடிகை ஷாலினி தனது மகனுடன் கால்பந்து மைதானத்திற்கு வந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நடிகை ஷாலினி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித். இவரது மனைவி நடிகை ஷாலினி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அவ்வப்போது குழந்தைகளுடன் வெளியே செல்லும் இவர்கள் சில புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாகும். திருமணம் ஆனதிலிருந்து நடிப்பிற்கு குட்பை கூறிய ஷாலினி கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.
தற்போது அஜித் ஏகே 62 படத்தில் நடித்து வரும் நிலையில், ஷாலினி குழந்தைகளுடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றார்.
மகனுடன் ஷாலினி
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய மகன் ஆத்விக்குடன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த எப்.சி கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
ஐ எஸ் எல் என்று கூறப்படும் கால்பந்து போட்டியை ஷாலினி கண்டு ரசித்துக்கொண்டிருந்த போது, எப் சி அணியின் உரிமையாளரான பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், ஷாலினி அஜித் போட்டியை காண வந்துள்ளதை அறிந்து, நேரடியாக அவரை சந்தித்து வரவேற்றார்.
மேலும் அவரின் மகனையும் வாழ்த்திய காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Abhishek bachan meets Shalini & advik
— திருச்சிகாரன்? (@silenttwits) February 28, 2023
Cute ? pic.twitter.com/Fj3ueZWFk3