பசங்க பட சிறுவனுக்கு திருமணம்? 4 வயது மூத்த நடிகை! இந்த பிரபலம் தானா
பசங்க படத்தின் மூலம் புகழ்பெற்ற மாஸ்டர் கிஷோருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம்.
பட்டிதொட்டியில் கலக்கிய பசங்க
கடந்த 2009ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் பசங்க. 6ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு அதிகமாக வரவேற்பு இருந்தது.
பல விருதுகளையும் வென்றது, இந்தபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் கிஷோர்.
தற்போது வளர்ந்து பெரிய பையனான கிஷோர், விரைவில் காதலியை கரம்பிடிக்கவுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
காதல் திருமணம்
கிஷோரும், சின்னத்திரை நடிகையான ப்ரீத்தி குமாரும் காதலிப்பதாக அறிவித்துள்ளனர்.
அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அச்சோமா, உன்னை திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருக்கிறேன்.
அடுத்த ஆண்டு நிச்சயம் கணவன்- மனைவியாக பிறந்தநாள் உட்பட எல்லா நிகழ்வுகளையும் கொண்டாடுவோம், லவ் யூ என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆபிஸ் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான ப்ரீத்தி குமார் லட்சுமி கல்யாணம், வள்ளி, வானத்தை போல போன்ற தொடர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.