ஹனிமூன் புகைப்படங்ளைப் பகிர்ந்த நடிகை சமந்தா! குவியும் லைக்குகள்
சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு தற்போது போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் (Lisbon) நகரில் தங்கள் ஹனிமூனை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா.

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவுக்கு் ஓய்வு கொடுத்து விட்டு,உடல் நலனில் கவனம் செலுத்தி வந்தார்.
இதற்கிடையில், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. ஆனால் சமந்தா அது குறித்து எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

வதந்திகளை உண்மையாக்கும் வகையில், அண்மையில் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில், தற்போது rமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் (Lisbon) நகரில் தங்கள் ஹனிமூனை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |