நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளா? முதன்முதலாக வெளியான அரிய புகைப்படம்
நடிகை ரேகா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் முதன்முறையாக இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகை ரேகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் ரேகா. இவர் சத்யராஜுடன் இணைந்து கடலோரக் கவிதைகள் படத்தின் மூலம் அறிமுகமானார்.
பின்பு பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், குடும்ப பாங்கான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.
பின்பு சினிமா வாய்ப்புகள் குறையவே, நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.
அதன் பின்பு நடிப்பில் களமிறங்கிய இவர், சமீபத்தில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.
இவரது மகளை ரசிகர்கள் அவ்வளவாக அவதானித்திராத நிலையில், தனது மகளுடன் புகைப்படத்தினை வெளியிட்டிருந்தார் ரேகா.
ஆம் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மகளுடன் வாக்கு பதிவு செய்ய வந்த ரேகா, அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |