50 வயதிற்கு மேல் கர்ப்பிணியாக நடிக்க காரணம் என்ன? நடிகை ரேகா உண்மை இதோ
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரேகா.
நடிகை ரேகா
கடலோர கவிதைகள் படத்தின் ஆசிரியர் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. அந்தளவுக்கு இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார்.
திருமணமாகி ஒரு மகள் உள்ள நிலையில், சின்னத்திரையில் தலைகாட்டத் தொடங்கினார். தொடர்ந்து அறிமுக இயக்குனரான மாலதி நாராயணன் இயக்கத்தில் உருவாகும் மிரியம்மா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது, இதில் 50 வயது பெண்ணான ரேகா கர்ப்பம் தரித்திருக்கிறார்.
தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும் மூத்த பெண்மணியின் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி பேசும் படமே மிரியம்மா.
இயக்குனர் கூறியது என்ன?
இதுகுறித்து இயக்குனர் பேசுகையில், பெண்ணாக பிறந்த ஒவ்வொரு நபருக்கும் தாய்மை அடைய வேண்டும் என விரும்புவர்.
அதை 50 வயதிற்கும் மேற்பட்ட பெண் விரும்புகிறார், செயற்கை கருவூட்டல் மூலம் கர்ப்பம் தரிக்கிறார்.
இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளே படத்தின் மையக்கரு என தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |