நீரிழிவு முதல் கல்லீரல் பிரச்சினை வரை அனைத்தையும் துரத்தி அடிக்கு பாகற்காய் ஜூஸ்!
பாகற்காய் ஜூஸ் கசப்பு சுவை மிகுந்ததாக இருந்தாலும் கூட உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்க கூடிய உணவாக இருக்கிறது.
பலருக்கு பிடிக்காத காயாக இருக்கும் பாகற்காயில் அடங்கி இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
மூன்றே நாட்களில் உடலில் உள்ள புழுக்களை அழித்து விரட்டும் அதிசக்தி வாய்ந்த பொருட்கள்
அதே சமயம் இதன் நற்பண்புகளுக்காக இதை அடிக்கடி விரும்பி உணவில் சேர்த்து கொள்பவர்களும் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறார்கள்.
இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் பாகற்காயை ஆரோக்கியமான ஒன்றாக வைத்திருக்கின்றன. வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் ஃபைபர் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுசாக இருக்கிறது பாகற்காய்.
பாகற்காய் ஜூஸ் நாள்பட்ட நீரிழிவு, மலச்சிக்கல், இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட பல கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
தினமும் ஒரு கப் பாகற்காய் ஜூஸ் குடித்துவர, கல்லீரல் பிரச்னைகள் நீங்கும்.
வழுக்கையிலும் முடி வளர இதை தடவுங்க....3 வாரத்திற்குள் இழந்த முடி மீண்டும் கிடைக்கும்!
பாகற்காய் ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்
- பாகற்காய் – 2
- எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
- தேன் – 1 டீஸ்பூன்
- மிளகு தூள் – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு
செய்முறை
பாகற்காயை கழுவி தோலை சீவி துண்டுகளாக்கி, விதைகளை நீக்கி விட வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளைப் போட்டு குடிக்க வேண்டும்.
இப்போது நீரிழிவு நோயாளிகள் குடிப்பதற்கு ஏற்ற பாகற்காய் ஜூஸ் ரெடி!!!