துக்கத்தை மறந்து உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மீனா! பிரபல நடிகை வைத்த விருந்து: வைரல் புகைப்படம் இதோ
நடிகை மீனாவை பிரபல நடிகை ராதிகா ரெஸ்டாரண்டுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மீனா
சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதை அடுத்து மீனாவுக்கு ஆறுதல் சொல்ல அவருடைய திரையுலக தோழிகள் குவிந்தனர்.
குறிப்பாக கலா மாஸ்டர், சங்கவி, சங்கீதா, ரம்பா, சினேகா உள்ளிட்ட பலரும் நேரில் ஆறுதல் கூறியதோடு அவரது மகளுக்கும் ஆறுதல் கூறியதோடு மீனாவை பழைய நிலைக்கு கொண்டுவரவும் செய்து வருகின்றனர்.


பிறந்தநாள் கொண்டாடிய மீனா
இந்த நிலையில் சமீபத்தில் மீனா தனது பிறந்தநாளை கொண்டாடிய போது கணவர் இழப்பில் இருந்து அவர் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக இந்த பிறந்த நாளை அவரது திரையுலக தோழிகள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து இருந்தனர்.
இதுகுறித்த வீடியோ, புகைப்படங்கள் சமீபத்தில் வைரலானது. தோழிகள் எடுத்த முயற்சியால் மீனா இந்த பிறந்தநாள் விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் மீனா பிறந்தநாளை அடுத்து பிரபல நடிகை ராதிகா ரெஸ்டாரண்டுக்கு அவரை அழைத்துச் சென்று விருந்து கொடுத்துள்ளார்.
இந்த விருந்து குறித்த புகைப்படங்களை மீனா தனது இன்ஸ்டாகிராம் பதிவு செய்து கூறியிருப்பதாவது: எப்போதும் எனக்காக சிறந்ததை நினைக்கும் அழகான நண்பர்களை கொண்டிருப்பதற்கும் என்னை மகிழ்ச்சியாக பார்க்க தங்களால் முடிந்ததை செய்த எனது நண்பர்களுக்கும் நன்றி என பதிவு செய்துள்ளார்.
