உச்சக்கட்ட மகிழ்ச்சியில் மீனா! கணவர் இல்லாமல் வீட்டில் நடந்த விஷேசம்… சினேகாவின் சகோதரி கொடுத்த சர்ப்ரைஸ்
சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
தொடர்ந்து தமிழில் பல பிளாக் பாஸ்டர் படங்களில் நடித்த கண்ணழகி மீனாவுக்கு ரசிகர் பட்டாளமும் ஏராளம்.
சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.
இந்த சோகத்தில் இருந்து இவரை தேற்றுவதற்கு அவரது தோழிகள் பலவாறாக முயற்சி செய்து வருகின்றனர்.
#HBDMeena #Meena pic.twitter.com/VDJSO76qlD
— மீனா என் தேவதை (@Meena76198342) September 16, 2022
அதன்படி தனது 46வது பிறந்த நாளை காணும் மீனாவை மகிழ்ச்சி படுத்துவதற்காக சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவிற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மீனாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.