இது என்ன சைட் பிஸ்னஸா? இன்ஸ்கிராமில் மலிகை பொருட்கள் விற்பனை செய்யும் ரவீந்திர் மனைவி!
சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி இன்ஸ்டாகிராமில் மலிகை பொருட்கள் விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை பயணம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'அன்பே வா' சீரியலில் பிரபலமானவர் நடிகை மகாலட்சுமி.
இவரின் வில்லங்கமான நடிப்பிற்கும், குழந்தைத்தனமான சேட்டைகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
இவர் கதாநாயகி, வில்லி மற்றும் முக்கிய கதாபாத்திரம் இப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடியவராக தன் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இவர் முதல் திருமண வாழ்க்கை முறிவுற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து செப்டம்பர் 1ஆம் திகதி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களின் திருமண புகைப்படம் வெளியானதிலிருந்து நயனை விட பிரபல்யமான ஜோடியாக இருவரும் மாறியுள்ளார்கள்.
சைட் பிஸ்னஸா?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மகாலட்சுமி - ரவீந்தர் இருவரும் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விடயங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
அந்த வகையில் கடந்த சில தினங்களாக மகாலட்சுமி பல பொருட்களை விளம்பரம் செய்து வருகிறார். அதற்காக அவர் தனி சம்பளம் வாங்குகிறாரா என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து மகாலட்சுமி குறிப்பிட்ட நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட பொருட்களை விளம்பரம் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள்,“இது என்ன சைட் பிஸ்னஸா? என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.