மகாலட்சுமிக்கு மாமியார் கொடுமையா? டெலிவரி பாயான ரவீந்தர்.... இப்படி ஒரு நிலையா?
தயாரிப்பாளர் ரவீந்தரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்கள் நடிகை மகாலட்சுமிக்கு மாமியார் கொடுமையா என்று சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகை மகாலட்சுமி அன்பே வா ஷூட்டிங்கில் கலந்து கொள்ள படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து மகாலட்சிமியின் மாமியார் மருமகளுக்காக ருசியாக சமைத்து அதை தன் மகன் ரவீந்தரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்.
மனைவிக்காக டன்ஸோ பாயாக மாறியதாகக் கூறி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ரவீந்தர் போட்டுள்ளார்.
மேலும் பாத்திரத்தை எல்லாம் பத்திரமாக திருப்பிக் கொண்டு வரவில்லை என்றால் மாமியார் கொடுமை நடக்கும் என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
அவர் ஏதோ விளையாட்டுக்கு சொல்ல அதை போய் சீரியஸாக சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே மாமியார் சமைத்துக் கொடுத்த சாப்பாடு சூப்பர் என மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
அருமையான மாமியார்
இப்படி சமைத்து ஷூட்டிங்ஸ்பாட்டுக்கு சாப்பாடு அனுப்பி வைக்கும் அன்பான மாமியார் கிடைக்க மகாலட்சுமி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.