சிகப்பு நிற உடையில் மகாலட்சுமி ரவீந்தர் வெளியிட்ட புகைப்படம்! லைக்ஸைக் குவிக்கும் ரசிகர்கள்
தயாரிப்பாளர் ரவீந்தரின் மனைவி மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
ரவீந்தர் - மகாலட்சுமி
சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர், சீரியல் நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
குறித்த ஜோடி இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்பதால் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக மகாலட்சுமிக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரவீந்தரும், மகாலட்சுமியும் இருவரும் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்களும் இவர்களின் புகைப்படத்தினை அவதானித்து, சில அறிவுரையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
மகாலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படம்.
சமீபத்தில் ரவீந்தர் தனது 100வது நாள் திருமண நாளை புகைப்படத்தினை வெளியிட்டு கொண்டாடினார். இந்நிலையில் மகாலட்சுமி தற்போது புதிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தில் மகாலட்சுமி சிகப்பு நிற சுடிதார் அணிந்து கொண்டு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் லைக்ஸைக் குவித்து வருகின்றனர்.