ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்: பணத்தினை இழந்த பிரபல நடிகை
மும்பையில் வசித்து வரும் 64 வயதான மராத்தி நடிகை ஒருவர் குறுந்தகவல் ஒன்றினால் 1 லட்சத்து 48 ஆயிரத்தினை இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து தனது கணவரின் மொபைலுக்கு குறுந்தகவல் வந்ததாகவும், Know Your Customer (KYC) விபரங்கள் சரியில்லை என்பதால் நாங்கள் கொடுத்திருக்கும் செல்போன் எண் மூலம் சரிசெய்யவில்லையெனில், உங்களது எண் பிளாக் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த எண்ணுக்கு போன் செய்தபோது ஒருவர் தான் ஏர்டெல் ஊழியர் என்று சொல்லி Quick Support application-ஐ டவுன்லோடு செய்யக் கோரினார்.(அந்த அப்ளிகேஷன் மூலம் அடுத்தவரின் மொபைல் நடவடிக்கைகளை பார்க்க முடியும்)
அவர் சொன்னதை எல்லாம் நான் செய்தேன். KYC கட்டணமாக 10 ரூபாய் செலுத்தச் சொன்னார். பின்னர் வங்கி கணக்கு விபரங்களை கொடுக்கச் சொன்னார். நானும் கொடுத்துவிட்டேன்.
பின்னர் சந்தேகம் அடைந்து ஏர்டெல் கடைக்கு சென்று விசாரித்தால், நாங்கள் எந்த காலும் பண்ணவில்லை என்றார்கள்.
உடனே வங்கிக்கு சென்றால் அந்த பிராடு நபர் என் கிரெடிட் கார்டு விபரங்களை பயன்படுத்தி ரூ. 1.48 லட்சம் பணம் எடுத்தது தெரிய வந்தது. அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.