33 வயதில் இவ்வளவு சொத்துக்களா? ராணியாக வாழும் கீர்த்தி சுரேஷ்
நேற்று தன் 33 வயதை கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக 2000-ல் அறிமுகமாகி, 2013-ல் மலையாளத்தில் 'கீதாஞ்சலி' மூலம் நடிகையாக மீண்டும் திரையுலகில் கால் பதித்தார்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 'மகாநடி' (Nadigaiyar Thilagam) படத்தில் சாவித்திரியாக நடித்ததன் பின்னர் இவர் மக்கள் மத்தியில் பெரிதும் போற்றப்பட்டார்.
இதற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இவரின் முதல் திரைப்படம் தமிழில் இது என்ன மாயமாகும்.
என்ன தான் இது முதல் படமாக இருந்தாலும் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்த படம் 2016-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் பொன்ராம் கூட்டணியில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படம் தான்.
இத்திரைப்படத்திற்கு பின்னர் இவர் தொடரி, ரெமோ, பைரவா ஆகிய திரைப்படங்களில் தமிழ் முன்னணி நடிகர்களுடன் நடித்து இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இப்படி இருக்க நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் சொத்து மதிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
சொத்து மதிப்பு
ஒரு படத்துக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் இவரின் மொத்தம் 50 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறாராம். சென்னையில் ஜிம், ப்ரைவேட் தியேட்டர் அடங்கிய பிரமாண்ட சொகுசு பங்களா ஒன்றையும் வைத்திருக்கிறாராம்.
மேலும், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள BMW, 81 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் என சொகுசு கார்களும் அவரிடம் உள்ளன.
இவரது கணவர் பெரிய தொழிலதிபர். அவரது சொத்தையும் சேர்த்தால் கீர்த்தி சுரேஷ் வசம் மொத்தம் 100 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |