திருமணத்தை பார்த்து தெறித்து ஓடும் பழங்குடி பெண்கள்.. ஏன் இந்த முடிவு தெரியுமா?
இந்தியாவில் தற்போது இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாது, லிவ்-இன் உறவுகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
ஆனால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் இப்படியான உறவுகளில் இருப்பதை விரும்பவில்லை. மாறாக நிச்சயம் செய்யப்பட்ட உறவில் பிள்ளைகள் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.
இந்தியாவில் உள்ள வளர்ச்சியடைந்த நகரங்களில் கூட லிவ்-இன் உறவு அங்கீகரிக்கப்படாத வேளையில், பழங்குடியினர் சமூகத்தினர் இந்த உறவை அங்கிகரித்துள்ளனர்.
திருமணத்துக்கு முன்னர் கர்ப்பமாவது சாதாரணமான விடயமாகவும் இவர்கள் பார்க்கிறார். இந்த விடயம் வளர்ச்சியடைந்த நகரங்களில் வாழும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தெளிவான விளக்கத்தை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
திருமணம் நடக்காது!
ராஜஸ்தான் மாநிலம் - கராசியா பழங்குடியின மக்கள் தனித்துவமான கலாச்சார நடைமுறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இங்கு வாழும் பெண்கள் லிவ்-இன் உறவில் இருந்து தன்னுடைய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவில் போன்ற நாடுகளில் இளைஞர்களின் சுதந்திரத்தை பறிக்கும் திருமணத்தை இவர்கள் விரும்பவில்லை. இந்த கலாச்சாரத்தை இந்த சமூகத்தில் நீண்டகால பாரம்பரியமாக செய்து வருகிறார்கள்.
கராசியா பழங்குடியினர்
கராசியா பழங்குடியினர், ராஜஸ்தானின் தெற்குப் பகுதிகளில் இருக்கிறார்கள். இவர்கள் திருமணம் செய்யாமல் துணையுடன் உறவில் இருப்பதை கலாச்சாரமாக செய்து வருகிறார்கள். இளம் வயதில் உள்ளவர்கள் துணையை தேர்ந்தெடுத்து உறவில் இருப்பார்கள்.
அப்போது குழந்தைகளும் பெற்றுக் கொள்வார்கள். திருமண விழாக்களை பிற்கால பாரம்பரியமாக பார்க்கிறார்கள்.
இரண்டு நாள் திருமண விழா
குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் வாழும் மக்கள், "இரண்டு நாள் காதல் திருமண விழா(Two-day courtship fair)" எனப்படும் ஒரு சடங்கை செய்வார்கள். இங்கு இளம் வயதில் உள்ளவர்கள் வந்து தன்னுடைய துணையை தேர்வு செய்யலாம். அந்த சமயம் முதல் திருமணம் செய்யாமல் வாழ்வார்கள்.
வரதட்சணையும் இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக உள்ளது. அந்த கலாச்சாரப்படி, மணமகனின் குடும்பத்தினர் மணமகள் திரும்பியதும் மணமகனின் குடும்பத்தினருக்கு பணம் கொடுப்பது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |