அனல் பறக்கும் பிக்பாஸ் வொர்ட்டிங்.. சட்டென மாறிய டேஞ்சர் ஜோன் போட்டியாளர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வொர்ட்டிங் லிஸ்ட் நேற்றைய தினம் கடைசியாக இருந்த போட்டியாளருக்கும், இன்றைய தினம் கடைசியாக இருக்கும் போட்டியாளருக்கும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது. சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர்.
20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார். அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷனில் அதிகமான போட்டியாளர்களால் பார்வதி நாமினேஷன் செய்யப்பட்டார். அதன் பின்னர், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர், கம்ருதீன், சபரி, அரோரா, எஃப் ஜே, அப்சரா, ரம்யா ஜோ, கெமி என மொத்தம் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டார்கள்.
டேஞ்சர் ஜோன் இருப்பவர் இவரா?
இந்த நிலையில், அதிகமான வாக்குகளை பெற்று திவாகரன் முதல் இடத்தையும், திவாகரனை வைத்து முன்னேறி வரும் பார்வதி இரண்டாம் இடத்திலும் இருக்கிறார். அதே போன்று மக்கள் விரும்பப்படும் சபரி கம்ருதீன், ரம்யா ஜோ ஆகியோர் கணிசமான வாக்குகளை பெற்று முதல் 4 இடங்களில் இருக்கிறார்கள்.
நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் வொர்ட்டிங் அதிகமாக உள்ளது. அதன்படி, அப்சரா, எஃப் ஜே, கெமி மற்றும் அரோரா ஆகியோர் இந்த வாரம் அவர் எலிமினேட் செய்யப்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.
கடைசியாக இருக்கும் அரோரா காப்பாற்றப்பட்டால் திருநங்கை போட்டியாளரான அப்சரா எலிமினேட் செய்யப்படுவார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் அரோரா செய்யும் காதல் லீலைகளுக்கு விஜய் சேதுபதி எப்படியான ரிப்ளை கொடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
