20 வயது பெண்ணாக மாறிய நடிகை ஜோதிகா! இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படம்
நடிகை ஜோதிகா 20 வயது பெண் போன்று தனது ஹேர் ஸ்டைலை மாற்றி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஜோதிகா
சூர்யா மற்றும் ஜோதிகா படத்தில் ஜோடியாக நடித்த போது காதலித்து பின்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஜோதிகா சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.
பின்பு நீண்ட இடைவேளைக்கு பின்பு 36 வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுத்தார். பின்பு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தையும், பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
ஜோதிகா கடைசியாக அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'உடன்பிறப்பே' படத்தில் நடித்த நிலையில், தற்போது மலையாளத்தில் மம்மூடிக்கு ஜோடியாக காதல் தி கோர் என்கிற படத்திலும் ஹிந்தியில் ஸ்ரீ என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.
20 வயது பெண்ணாக மாறிய ஜோதிகா
படங்களில் நடிப்பதையும் தாண்டி தற்போது தனது கணவர் சூர்யாவுடன் சேர்ந்து பட தயாரிப்பு வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் ஜோதிகா, புத்தம் புதிய ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதனை அவதானித்த ரசிகர்கள், உண்மையில் இது ஜோதிகாவா... அல்ல அவருடைய மகளா என்று கூட கேள்வி எழுப்பி வருவதுடன் வைரலாக்கியும் வருகின்றனர்.
ஏனெனில் குறித்த புகைப்படத்தில் ஜோதிகா மிகவும் வயது குறைந்து காணப்படுவதே இதற்கு காரணம் ஆகும்.