துளிகூட மேக்கப் இல்லாமல் அக்கா நக்மாவுடன் நடிகை ஜோதிகா... தீயாய் பரவும் புகைப்படம்
நடிகை ஜோதிகா மற்றும் அவரது அக்கா நக்மா இருவரும் மேக்கப் இல்லாமல் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று தற்போது தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜோதிகா திருமணத்திற்கு பின்பு சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகின்றார்.
இவரது அக்கா நக்மா காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பின்பு இவரும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து திடீரென திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகினார்.
இவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் இவர்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் வேறு வேறு தந்தைக்கு பிறந்தவர்கள்.
நடிகை நக்மாவின் அம்மா ஒரு இஸ்லாமிய பெண் இவரது பெயர் ஷாம்னா காசி. இவர் பிரதாப்சிங் மொரார்ஜி என்பவரை திருமணம் செய்து, 3 ஆண்டுகளில் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
இவர்கள் பிரியும் போது ஷாம்னா காசி அவர்கள் கருவுற்று இருந்து 1974ம் ஆண்டு நக்மாவைப் பெற்றெடுத்துள்ளார்.
பின்பு நக்மா பிறந்த அடுத்த ஆண்டே சந்தர் சாதனா என்பவரை இரண்டாவது திருமணம் செய்ததோடு, இவர்களுக்கு ஜோதிகா மற்றும் இன்னொரு சகோரியும் பிறந்தார்கள்.
இந்நிலையில் ஜோதிகா மற்றும் நக்மா எந்தவொரு மேக்கப் இல்லாமல் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று முகநூலில் புத்துயிர் பெற்று வைரலாகி வருகின்றது.