நயன்தாரா பானியில் புதிராக குழந்தைக்கு பெயர் வைத்த இலியானா.. குழந்தை யார் மாதிரி தெரியுமா?
நயன்தாரா பானியில் குழந்தைக்கு பெயர் வைத்த இலியானாவின் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலியானா
தமிழ் சினிமாவில் “கேடி ” என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகை இலியானா.
இவர் இன்று பாலிவுட்டில் பிரபலமாக இருக்கலாம். ஆனால் இவரின் திரைப்பயணம் தமிழ் சினிமாவிலிருந்து தான் ஆரம்பமாகியது.
இலியானா இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மற்றும் ஹிந்தியில் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.
தமிழில் இரண்டு திரைப்படங்களில் நடித்து விட்டு கடைசியாக அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான "பிக் புல்" என்ற திரைப்படத்தில் நடித்து விட்டு அதன்பின்னர் இலியானாவிற்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக இல்லை.
குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
இந்த நிலையில் சினிமாவை விட்டு சென்றாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் இலியானா கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்துடன் அவரின் ரசிகர்களுக்கு கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இலியானாவிற்கு ஆண் குழந்ழை பிறந்துள்ளது.
இதனை இன்ஸ்டாவில், “ எங்கள் அன்பான மகனை, இந்த உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது" என்று கூறி, தங்களது மகனின் பெயர் Koa Phoenix Dolan என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |