இலியானா கணவர் இவர்தானாம்? வெளியான புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்
நடிகை இலியானா
தெலுங்கு திரையுலகத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை இலியானா. இவர் தமிழில் பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் விஜய்யுடன் ‘நண்பன்’ என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தன்னுடைய இடுப்பு அழகால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்த இலியானா. இந்தி திரையுலகம் பக்கம் திரும்பினார். பாலிவுட் சினிமாத்துறையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி பிகினி உடையில் நடித்தார் இலியானா.
இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்தார். ஆனால், இந்த காதல் குறுகிய காலத்திலேயே முறிவுக்கு வந்தது. இதன் பின்னர், பிரபல நடிகை கத்ரீனா கைஃப் சகோதரர் செபஸ்டியனை காதலித்து வருவதாகவும், அவருடன் இலியானா லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.
கர்ப்பத்தை அறிவித்த இலியானா
சமீபத்தில் திடீரென்று இன்ஸ்டாவில் இலியானா ஒரு குழந்தையின் ஆடையுடன்... மம்மா என்ற டாலர் அணிந்து, கர்ப்பமாக இருக்கும் தகவலை ரசிகர்களுக்கு மறைமுகமாக கூறினார். இதன் பின்னர், வயிறு பெரிதாகி கர்ப்பமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி திருமணம் ஆகாமல் கர்ப்பமாகிவிட்டாரே என்று கமெண்ட் செய்து வந்தனர். இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் திருமணமே ஆகாமல் கர்ப்பமாகிவிட்டாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
காதலர் அறிமுகம்?
இந்நிலையில், இதுவரை தன் காதலர் குறித்த எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருந்த வந்த இலியானா தன் இன்ஸ்டா பக்கத்தில் முதல்முறையாக காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில், அந்த நபரின் பெயரை இலியானா சொல்லாமல் ஸ்டுவிட் வைத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த மனிதர் யார் என்று தேடுதல் வேட்டையை தொடர்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |