திவ்யாவிற்கு குழந்தை பிறந்து விட்டதா? உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சின்னத்திரை நடிகை திவ்யா கணவரில்லாமல் குழந்தை பிறந்துள்ள தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
கணவரில்லாமல் தவிக்கும் திவ்யா
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா.
மேலும், இவர் “செவ்வந்தி” சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறிதுக்காலம் சென்றும் தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா கணவர் அர்ணவ்விடம் கூறியிருக்கிறார்.
அர்ணவ் “ குழந்தை வேண்டாம் ” என கோபமுற்று அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
என்ன குழந்தை பிறந்துள்ளது தெரியுமா?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யா அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவார். இதனை தொடர்ந்து தற்போது திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை அவர் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த காத்திருப்பு நீண்டது ஆனால் மிகவும் சிறப்பு வாய்ந்தது, என்ன நடந்தது என்பதற்காக அல்ல, ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதற்காக. நீங்கள் கொடுத்த உந்துதல், ஆதரவு, சக்தி, அன்பு, பலம் கண்டிப்பாக நிபந்தனையற்றது.
மேலும் விசித்திரக் கதைகளில் இருப்பதைப் போல என்றென்றும் உங்களில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உன்னை காதலிக்கிறேன் என் அன்பே தேவதை! என் அழகான பெண் குழந்தை” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த சின்னத்திரை பிரபலங்கள் திவ்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
