குழந்தை பிறந்துள்ள தகவலை மறைமுகமாக வெளியிட்டுள்ளாரா திவ்யா? குழப்பத்தில் இருக்கும் நெட்டிசன்கள்
குழந்தை பிறந்த விடயத்தை மறைமுக வெளிப்படுத்தி நடிகை திவ்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சின்னத்திரைக்குள் எப்படி வந்தார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா. இவரின் யதார்த்தமான நடிப்பால் இந்தியா உட்பட தமிழர்கள் வாழும் அணைத்து பகுதியிலும் ரசிகர்களை பிடித்து வைத்திருக்கிறார்.
மேலும், இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறிதுக்காலம் சென்றும் தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா கணவர் அர்ணவ்விடம் கூறியிருக்கிறார்.
அர்ணவ் “ குழந்தை வேண்டாம் ” என கோபமுற்று அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
குழந்தை பிறந்துள்ள தகவல் இரகசியமாக உள்ளதா?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்யா வாழ்க்கையில் நடக்கும் விடயங்கள் அனைத்தையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவாக பகிர்ந்து வருகிறார்.
இவரின் ஒவ்வொரு பதிவை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இவர் பக்கத்தில் தற்போது கணவரும் இல்லாத காரணத்தால், இவருக்கு ஆதரவாக இருக்கும் வகையில் சக நடிகர்களும் சில விடயங்கள் செய்து வருகிறார்கள்.
இதன்படி, சமிபத்தினங்களுக்கு முன்னர் இவருக்கு பிரசவம் இடம்பெற்றுள்ளது என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகிய நிலையில், அது தொடர்பான தகவல்களை தேடி வருகிறார்கள்.
ஆனால் இது குறித்து நடிகை திவ்யா ஒரு பதிவும் வெளியிடவில்லை, தற்போது அவர் குழந்தையின் ஆடை புகைப்படம் ஒன்றுடன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், திவ்யா குழந்தை பிறந்துள்ளதா? அப்படி என்றால் என்ன குழந்தை எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.