தேவயானி கணவர் சொன்ன அந்த ஒரு விஷயம்.. இனியா செய்யும் புது பிசினஸ்
விருது விழாவில் கலந்து கொண்ட தேவயானி கணவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தேவயானி
தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை தேவயானி.
இவர் திருமணத்திற்கு பின்னர் பெரியளவு வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்போது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இப்படியொரு நிலையில் அவருடைய அன்பு மகள் இனியா சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக வலம் வந்தார்.

இறுதி வரை சென்ற இனியா, யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தார்.
மகளை புகழ்ந்து தள்ளிய தேவயானி கணவர்
இந்த நிலையில், விகடன் விருது விழாவில் தேவயானி மகள் மற்றும் கணவருடன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய தேவயானி கணவர் ராஜ்குமார், “ என்னுடைய மகளுக்கு சில கருத்துக்கள் வரும். நட்சத்திரத்தில் குழந்தை என்பதால் இவ்வளவு விடயங்களை தொலைக்காட்சி செய்தது என்றார்கள். ஆனால் அது உண்மையல்ல, இனியாவின் விடாமுயற்சியே இறுதி வரை வருவதற்கான முக்கிய காரணம்.

இனியா எங்களுக்கு கிடைத்த விருது தான். அவர் கையில் வருதை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய பிஷ்னஸ்க்கு கூட அவர் தான் உதவியாக இருக்கிறார்..” என பேசினார்.
தொடர்ந்து பேசிய இனியா, “ என்னுடைய அம்மாவுக்கு மூக்குத்தி போட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்பாவுக்கு பிடிக்காது என அவர் போடவில்லை. அவருக்கு நான் ஒரு மூக்குத்தி வாங்கிக் கொடுக்க வேண்டும்..” என பேசினார்.
இவர்களின் பேட்டி காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |