நடிகை குஷ்பு தனது 20 வயதில் எப்படியிருப்பார்னு தெரியுமா? வைரலாகும் ஒற்றை புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை குஷ்பு 20 வயதில் எவ்வாறு இருந்தார் என்ற புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு, பிரபு, ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் பின்பு, ரஜினி, கமல், விஜயகாந்த் உட்பட முக்கிய பிரபலங்களுடன் பல படங்களில் நடித்து்ளார்.
இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து செட்டில் ஆன இவர், தற்போது அம்மா கதாபாத்திரத்தில் படங்களில் நடித்து அசத்தி வருகின்றார்.

சின்னத்திரை சீரியல்களிலும் தனது நடிப்பு திறமையைக் காட்டிய இவர் தற்போது இளமையாகவே இருந்து வருகின்றார். இந்நிலையில் இவரது இளம்வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது நடிகை குஷ்பு தனது 20 வயதில் எப்படி இருந்தார் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். குஷ்பு தனது 20 வயதில் முதன்முறையாக துபாய்க்கு சென்ற போது எடுத்த புகைப்படத்தினை தற்போது வெளியிட்டுள்ளார்.
குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் குஷ்புவின் அழகைக் கண்டு வாயடைத்துப் போனதுடன், தங்களது கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |