Skin care: இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும்.. பாக்கியலட்சுமி நடிகை அக்ஷிதா அழகின் ரகசியம்
பொதுவாக கோடை காலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டன.
வெளியில் இடங்களுக்கு சென்று வீடு திரும்பும் முன்னர் உடல் சோர்வடைந்து விடுகிறது. ஏனெனின் நமது உடலில் இருக்கும் நீரப்பதனை உறிஞ்சும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது.
இதற்காக நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது அவசியம். உடல் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பதனை உங்களுக்கு சருமத்தையும் முகத்தையும் பார்த்தால் சொல்லி விடலாம்.
அந்த வகையில் உடல் சோர்வால் வாடியிருக்கும் முகத்தை எப்படி புத்துணர்ச்சிமிக்கதாக மாற்றலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சோர்வை குறைப்பது எப்படி?
1. கோடைக்காலங்களில் வெளியில் செல்லும் மாணவர்கள், அலுவலக பணிக்கு செல்பவர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் என பலரும் நீர் அதிகமாக பருக வேண்டும். எப்போதும் உடலை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்.
2. வெயிலில் அடிக்கடி வெளியே செல்லும் பொழுது முகம் மற்றும் சருமம் கருமையடையும். பியூட்டி பார்லர் செல்லும் பழக்கம் கொண்டவர்கள் அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வார்கள்.
3. ஃபேஸ் க்ரீம், சீரம் போன்றவற்றில் இரசாயனங்கள் கலந்திருப்பதால் அதனை பயன்படுத்தினால் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முடிந்தளவு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற கற்றுக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்
- தயிர் - தேவையான அளவு
- உருளைக் கிழங்கு- 1
செய்முறை
முதலில் கொடுக்கபட்ட இரண்டு பொருட்களையும் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உருளை கிழங்கை தோல் நீக்கி, அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.
இவை பசை பதத்திற்கு வந்ததும் நம் முகத்தில் தடவி விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி விடும். இதனை அக்ஷிதா அவரின் ரசிகர்களுக்கு கூறியுள்ளார். இதனை நாமும் செய்து பார்த்து பலன் எப்படி இருக்கிறது என்பதனை கருத்தாக பகிர்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |