மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய்- யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் உடல் ஆரோக்கியத்தில் பெறும் பங்கு வகிக்கிறது.
ஒட்டுமொத்த உடலையும் நோய் எதிர்ப்பு சக்தி தான் பாதுகாப்பாக பார்த்து கொள்கிறது. இதனால் நாம் உண்ணும் உணவுகளில் அதனை ஊக்கப்படுத்தும் வகையில் ஊட்டசத்துக்கள் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட நன்மைகளை கொண்ட நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பலன் கிடைக்கிறது.
நெல்லிக்காய் இயற்கையாகவே உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. அதில், ஆன்டிஆக்ஸிடென்ட், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள நெல்லிக்காயை வைத்து பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நெல்லிக்காயில் ஆரஞ்சுப்பழத்தை விட 20 மடங்கு வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகிறது. ஆனால் அனைவருக்கும் பாதுகாப்பானது என கூற முடியாது. குறிப்பிட்ட சிலர் நெல்லிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
அப்படியாயின், நெல்லிக்காயை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
1. நெல்லிக்காயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் சி சத்து உள்ளது. இது அமிலத்தன்மையை அதிகப்படுத்தும். இதனால் நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது எனக் கூறப்படுகிறது. அதிக அமிலத்தன்மை கொண்டவர்கள் சாப்பிடும் பொழுது அதன் நிலைமை இன்னும் அதிகமாகலாம்.
2. மற்ற பழங்களிலும் பார்க்க நெல்லிக்காயில் ஆண்டி பிளேட்லெட் பண்புகள் சற்று அதிகமாக உள்ளது. இது இரத்தம் தொடர்பான கோளாறு உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லதல்ல. அத்துடன் ஆண்டி பிளேட்லெட் பண்புகள் இரத்தத்தை மெல்லியதாகவும் இரத்த உறைதலை தடுத்து நிறுத்தும். அதில் பிரச்சினையுள்ளவர்கள் சாப்பிட்டால் விளைவுகள் ஆபத்தாக முடியலாம்.
3. சர்க்கரை நோயாளர்கள் நெல்லிக்காயை சாப்பிடும் பொழுது ரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும். அதிகமான நார்ச்சத்துக்கள் கொண்டிருப்பதால் சர்க்கரை நோயாளர்கள் சாப்பிடலாம். அதே சமயம், குறைந்த சர்க்கரை பிரச்சினையுள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.
4. இதய நோயுள்ளவர்கள் நெல்லிக்காய் சாப்பிடும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனின் சில மருந்துகள் நெல்லிக்காயின் தாக்கத்தை உடலுக்கு அழற்சியை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக இதய நோய்க்கான மருந்துகளுடன் நெல்லிக்காயை சாப்பிடக் கூடாது.
5. நெல்லிக்காய் சாப்பிட்டால் மலம் கழிப்பது சுலபம் என பலரும் கூறுவார்கள். நெல்லிக்காய் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை அதிகமாகலாம். இதனால் அளவுடன் இருப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |