புதிய படத்தில் இணைந்த வடிவேலுவின் சொத்து மதிப்பு என்ன?
நடிகர் வடிவேலுவின் சொத்து மதிப்பு தற்போது இணையவாசிகளால் பகிரப்பட்டு வருகின்றது. இது தொடர்பான முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
வைகை புயல் சொத்து மதிப்பு
வைகைப்புயல் வடிவேலு பல கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதை தன்னுடைய காமெடி மூலம் கவர்ந்தவர். சினிமாவின் பல முக்கிய முன்னணி நடிகர்களுடன் நடித்து தன் புகழை மேன்படுத்தி கொண்டவர்.
இவரின் சொந்த ஊர் மதுரை. 1988 டி ராஜேந்தர் இயக்கத்தில் என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதை அடுத்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை வேடம் ஏற்று தன்னுடைய பாடி லாங்குவேஜ் மற்றும் கலகலப்பான டயலாக் டெலிவரி மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், சிம்பு , தனுஷ் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னர் பல வெற்றிப்படங்களை நடித்த வடிவேலு சில வருடங்களாக எந்தவித வெற்றிபடமும் நடிக்கவில்லை.
படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை. முன்பணம் வாங்கிவிட்டு படங்களில் நடிக்காமல் ஏமாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகளால் சினிமாவில் ரெட் கார்டு கொடுத்து நடிக்க விடாமல் தடை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அந்த தடை நீங்கி இரண்டாவது இன்னிங்சில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் வடிவேலு. இவரின் சினிமா கால வாழ்க்கை சுமார் 65 வருட காலமாகும்.
அந்த வகையில் இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 150 கோடிகளுக்கு மேல் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர சென்னையில் இரண்டு பங்களா ,ஆடி கார், bmw கார், போன்ற சொகுசு ரக கார்களையும் வைத்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |