சிவகார்த்திகேயன் வீட்டில் விஷேசம்.. அவரே போட்ட பதிவு- வாழ்த்தி தள்ளும் ரசிகர்கள்
அமரன் படத்தின் மூலம் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் வீட்டில் இன்றைய தினம் விஷேசம் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக மாறியிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர், நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. அதில் சாய் பல்லவியின் நடிப்பு மக்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டது.
உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்த இந்த திரைப்படம் நாட்டிற்காக உயிரையே கொடுத்த இராணுவ வீரனின் கதையாகும்.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்தை தொட்டு விட்டது. தற்போது கைவசம் எஸ்கே 23 மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷேசம்
இந்த நிலையில், இன்றைய தினம் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய அம்மாவின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
70 ஆவது வயது பிறந்த நாளை கொண்டாடி வரும் அம்மாவுக்கு சிவகார்த்திகேயன் போட்ட பதிவில், “அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன். மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே அதை நீயே தருவாயே..” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அத்துடன் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் அம்மாவுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |