சொந்தமாக தனிதீவு வாங்கி பாலிவுட்டை மிரள வைத்த இலங்கை நடிகை- எவ்வளவு தெரியுமா?
இந்திய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனியாக தீவொன்றை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்
இந்திய சினிமாவில் இருக்கும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், அலியா பட், கத்ரீனா கைஃப், சமந்தா, கரீனா கபூர் உள்ளிட்ட டாப் நடிகைகளில் ஒருவர் தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
சுமாராக 15 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடிக்கும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இலங்கையைச் சேர்ந்தவர்.
இவர் நடிப்பில் வெளியான மர்டர் 2, ஹவுஸ்ஃபுல் 2, ரேஸ் 2, கிக் உள்ளிட்ட படங்கள் மாத்திரமே வெற்றி படமாக அமைந்தது.
கடைசியாக ஜாக்குலின் நடிப்பில் வெற்றி பெற்ற படம் 2016 இல் வெளியான ஹவுஸ்ஃபுல் 3 தான்.
தனி தீவு வாங்கினாரா?
இந்த நிலையில், 2011 முதல் 14 வரை ஜாக்குலின் தான் பாலிவுட்டில் முதலிடத்தில் இருந்து வந்த ஜாக்குலின், கடந்த 2012 ஆம் ஆண்டு தனது சொந்த நாடான இலங்கையின் தெற்கு கடற்கரையில் தனி தீவொன்றை வாங்கியுள்ளார்.
இந்த தீவை 600 ஆயிரம் டாலர்கள் (2012இல் இதன் மதிப்பு ரூ.3 கோடி மேல்) பணம் கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நான்கு ஏக்கர் கொண்ட தனித்தீவில் ஆடம்பர வில்லாவை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக இந்த உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த தனித்தீவை வாங்கியதிலிருந்து ஜாக்குலின் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |