ஐசியூவிற்கு மாற்றப்பட்ட நடிகர் ரோபோ சங்கர்- சற்றுமுன் வெளியான தகவல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரோபோ சங்கர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் இந்திரஜா ரோபோ சங்கர்.
இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இதனை தொடர்ந்து இவர் மட்டுமல்ல இவரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அந்த வகையில் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக தான் நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
மருத்துவர் கூறிய காரணம்
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரோபா சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து தற்போது சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடந்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என மயங்கி விழுந்துள்ளார்.
மேலும், பரிசோதனையில் படப்பிடிப்பின்போது ரோபோ சங்கருக்கு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் மயக்கம் வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தி அறிந்த சின்னத்திரை பிரபலங்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோபோ சங்கரின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |