போயஸ் கார்டனில் பங்களா, Rolls royce கார்கள் என கோடிகளில் புரளும் ரஜினிகாந்த்- சொத்து மதிப்பு எவ்வளவு?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த்.
சினிமாவில் இருக்கும் ஒரு சில நடிகர்கள் கூட இன்னும் ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கின்றனர்.
74 வயதாகும் ரஜனிகாந்த் தற்போதும் கோலிவுட் படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக “வேட்டையன்” திரைப்படம் வெளியானது. அடுத்ததாக “கூலி” திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
அதுமட்டுமன்றி “ஜெயிலர் 2” படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களின் அப்டேட்டுகளும் இன்றைய தினம் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சமயத்தில் ரஜினிகாந்த் இன்றைய தினம் அவருடைய 74ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதன்படி, போயஸ் கார்டனில் கடந்த 2002ஆம் ஆண்டே பங்களா கட்டியிருக்கிறார். இதன் மதிப்பு மொத்தமாக 50 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட வெளிநாட்டு கார்களும் இருக்கின்றன.
அவைகளின் மதிப்பே கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும், ஒரு படத்துக்கு 150 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு சொத்துக்களை வைத்திருக்கும் ரஜினியின் மொத்த சொத்து மதிப்பு 500- 600 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகின்றது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |