சரிகமப - வில் மெய்சிலிர்க்க பாடிய போட்டியாளர்கள்: முத்தம் கொடுத்த தருணம்
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது தளபதி விஜய் கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் இரண்டு சிறுவர்கள் பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் தற்போது நடிகர் விஜய் சுற்று நடைபெற உள்ளது. சரிகமப சீசன் 5 சீனியர் முடிந்தவுடன் சரிகமப லிட்டில் சாம்ஸ் ஆரம்பிக்கப்பட்டது. இதில் பல இடங்களிலும் இருந்து சிறுவர்கள தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் மொத்தம் 23 சிறுவாகள் தெரிவு செய்யபட்டு இருந்தனர். கடந்த வாரம் Folk பாடல் சுற்று நடைபெற்றது. இதில் அனைவரும் சிறப்பாக பாடி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் நடிகர் விஜய் பாடல் சுற்று கொண்டாடப்பட உள்ளது. இதில் போட்டியாளர்கள் நடிகர் விஜய் படத்தில் இடம்பெற்ற பாடலை அப்படியே அந்த வேடம் போட்டு பாடுவார்கள்.

அதற்கிணங்க தற்போது இரண்டு சிறுவர்கள் “உன்னாலே என்னாலும் என்ஜீவன் வாழுதே” பாடலை மிகவும் சிறப்பாக பாடி உள்ளனர். இந்த மாதிரியான பாடல்கள் பாடுவது மிகவும் கஷ்டம்.
இந்த பாடல்களில் சங்கதிகள் துல்லியமாக இருக்கும். ஆனால் அதையும் அந்த சிறுவர்கள் சுத்தமாக பாடி உள்ளனர். இதை அரங்கத்தில் பார்த்து கொண்டு இருந்தவர்கள் வியந்து பார்த்தனர்.
சிலர் இந்த சிறுவர்கள் எப்படி இப்படி பாடுகிறார்கள் என ஆச்சரியப்பட்டனர். அதிலும் யூரி மெம்பர் லாவண்யா முத்தம் கொடுத்த காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |