நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் இவ்வளவா?
தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தியில் சல்மான் கான் உடன் சிக்கந்தர், ரன்பீர் கபூருடன் அனிமல் 2 மற்றும் அல்லு அர்ஜுனுடன் புஷ்பா 3-ஆம் பாகம் உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார். இது குறித்து இவரின் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ராஷ்மிகா மந்தனா
தற்போது தென்னிந்திய நடிகைகளில் முன்னணியில் நடிகை ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். தற்போது இவரின் புஸ்பா 2 திரைப்படம் 6 நாட்களில் 1000 கோடி வசூலை செய்துள்ளது.
இதன் காரணத்தால் நடிகை ராஷ்மிகா மந்தனாவை படங்களில் நடிக்க வைப்பதற்கு முன்னணி ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணத்தால் ராஸ்மிகா தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த திரைப்படம் சுமார் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருந்தது.
ராஸ்மிகா நடிக்கும் படம் ரசிகர்களின் இதயத்தை கொள்ளை கொள்வதால் அதிக வசூலை எட்டுகிறது. புஷ்பா படத்துடைய முதல் பாகத்திற்கு ராஷ்மிகா மந்தனா 3 கோடி ரூபாய் முதல் 4 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார்.
இதன் இரண்டாம் பாகம் நடிப்பதற்கு 2 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகின்றது. இனிவரும் படங்களில் நடிப்பதற்கு சுமார் 15 கோடி ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்க கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |